உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்டத்தில் 18 கோவில்களில்  சுதந்திர தின சமபந்தி விருந்து

மாவட்டத்தில் 18 கோவில்களில்  சுதந்திர தின சமபந்தி விருந்து

திருப்பூர்; சுதந்திர தின விழாவில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 18 கோவில்களில், கலெக்டர், துணை கலெக்டர்கள் தலைமையில் சமபந்தி விருந்து நடக்கிறது. அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், சுதந்திர தினவிழாவையொட்டி, சமபந்தி விருந்து நடைபெற உள்ளது. அதன்படி, நாளை, மாவட்டத்தில் உள்ள, 18 கோவில்களில் சமபந்தி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் மனிஷ் நாரணவரே அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடக்கும் சமபந்தி விருந்தில் பங்கேற்கிறார். டி.ஆர்.ஓ., - ஊத்துக்குளி வெற்றி வேலாயுதசாமி கோவில், மாவட்ட வழங்கல் அலுவலர் - வாழைத்தோட்டத்து அய்யன் கோவில், முதன்மை கல்வி அலுவலர் - கருவலுார் மாரியம்மன் கோவில் உட்பட, 18 கோவில்களில் நடக்கும் சமபந்தி விருந்தில், வருவாய்த்துறை, கால்நடைத்துறை, கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ