உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கரும்பு அபிவிருத்தி சாலை மேம்பாட்டு பணிகள் ஆய்வு

கரும்பு அபிவிருத்தி சாலை மேம்பாட்டு பணிகள் ஆய்வு

உடுமலை, ;வாளவாடி இணைப்பு ரோட்டில் மேம்பாட்டு பணிகளை, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.உடுமலை - சின்னாறு ரோட்டில் இருந்து போடிபட்டி அருகே, வாளவாடி இணைப்பு ரோடு பிரிகிறது. கரும்பு அபிவிருத்தி சாலை பிரிவின் கீழ் பராமரிக்கப்படும் இந்த ரோட்டில், ஓடுதளம் வலுப்படுத்துதல், சிறுபாலம் திரும்ப கட்டுதல் மற்றும் தடுப்பு சுவர் கட்டும் பணி முடிவு பெற்றுள்ளது.இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை திருப்பூர் கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், தாராபுரம் கோட்ட பொறியாளர் ராணி உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.உதவிக்கோட்ட பொறியாளர் ராமுவேல், உதவி பொறியாளர் லோகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வின் போது உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை