உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மூலிகை செடிகள் சேகரிக்க ஆர்வம்

மூலிகை செடிகள் சேகரிக்க ஆர்வம்

உடுமலை:பருவமழைக்கு பிறகு ரோட்டோரத்தில், செழித்து வளரும் பல்வேறு மூலிகை செடிகளை, மருத்துவ தேவைக்காக சேகரித்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், செம்மண், களிமண் உள்ளிட்ட பல வகையான மண் வகைகள் உள்ளன. இத்தகைய மண்களில், பருவமழைக்கு பிறகு, பிரத்யேகமாக பல்வேறு மூலிகைகள் செழித்து வளரும். குறிப்பாக, ஆவாரை, தொட்டாசிணுங்கி, வேலிப்பருத்தி, நெருஞ்சி, கற்றாழை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகள் ரோட்டோரத்திலும், தரிசு நிலங்களிலும் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு அதிகளவு வளர்ந்துள்ளது.இந்த மூலிகைகளை முன்பு, கேரளா மாநிலத்துக்கு சித்த மருத்துவ தேவைக்காக மொத்தமாக சேகரித்து சென்று வந்தனர். தற்போது, உள்ளூரிலும் இத்தகைய மூலிகைகளை சேகரித்து பயன்படுத்த துவங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை