உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சர்வதேச அளவில் சிலம்ப போட்டி:  என்.வி., மெட்ரிக் மாணவர் தேர்வு 

சர்வதேச அளவில் சிலம்ப போட்டி:  என்.வி., மெட்ரிக் மாணவர் தேர்வு 

உடுமலை:சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்க, பெதப்பம்பட்டி பள்ளி மாணவர் தேர்வு பெற்றுள்ளார்.ஆசிய அளவில் சிலம்பம் போட்டி, நாகர்கோவிலில் நடந்தது. இப்போட்டியில், இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். போட்டியானது, மினி சப்ஜூனியர், சப்ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. ஒரு மாணவர், மூன்று பிரிவுகளில் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது.முடிவில், இந்திய அணி, ஒட்டுமொத்த கோப்பையை வென்றது. அதில் சர்வதேச அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றது.பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் மாணவர் கனீஷ், இந்திய அணியில் இடம்பிடித்து, தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவரை, பள்ளித்தாளாளர், செயலாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை