இன்று சேலத்தில் நடைபெறவுள்ள மாநில கபடி அணி வீரர் தேர்வில் பங்கேற்கும், திருப்பூர் மாவட்ட உத்தேச அணி நேற்று தேர்வு செய்யப்பட்டது.மார்ச் மாதம், பீகாரில், 16 வயதுக்குட்பட்டோர் தேசிய சப்-ஜூனியர் கபடி போட்டி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க உள்ள தமிழக கபடி அணித்தேர்வு, சேலம், தாழையூர், சாமி ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் இன்று நடக்கிறது. தமிழக அணிக்கான தேர்வில் பங்கேற்கவுள்ள, திருப்பூர் மாவட்ட வீரர் தேர்வு நேற்று நடந்தது.திருப்பூர், காங்கயம் ரோடு, மாவட்ட அமெச்சூர் கபடி கழக மைதானத்தில் நேற்று நடந்த தேர்வு போட்டியில், 110 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஐந்து பேர் தேர்வாகினர். முன்னதாக, மாவட்ட அமெச்சூர் கபடிக் கழக சேர்மன் கொங்கு முருகேசன் வரவேற்றார். மாநில அமெச்சூர் கபடிக் கழகத்தின் பொருளாளர், மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகத்தின் செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் போட்டிகளை துவக்கி வைத்தார்.செய்தித் தொடர்பாளர் சிவபாலன், இணைச் செயலாளர்கள் செல்வராஜ், தேர்வுக்குழுத் தலைவர் ருத்ரன், தேர்வுக்குழு உறுப்பினர்கள் ராஜூ, வெங்கடேஷ், மகேஷ், மணிகண்டன், வினோத், நடுவர் குழுத்தலைவர் முத்துச்சாமி, நடுவர் குழு கன்வீனர் சேகர், இணை கன்வீனர் தண்டபாணி, டெக்னிக்கல் உறுப்பினர் ரங்கசாமி, கவுரவ உறுப்பினர் கொங்குநல்லசிவம், நடுவர்கள் உமாபதி, சிவகுரு, நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.மாநில கபடி அணி வீரர் தேர்வில் பங்கேற்க உள்ள ஐந்து வீரர்களும், உத்வேகத்துடன் சேலம் புறப்பட்டுள்ளனர்.