உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்டபொம்மன் பிறந்த நாள் விழா

கட்டபொம்மன் பிறந்த நாள் விழா

அனுப்பர்பாளையம் : சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்ட பொம்மனின், 265வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.விழாவையொட்டி, மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் பாரிகணபதி, தலைமையில் கட்சியினர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணபிரான் மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !