உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டாஸ்மாக் அறிவிப்பை கழற்றி வீசி கெத்து பார் உரிமையாளர் தில்லு

டாஸ்மாக் அறிவிப்பை கழற்றி வீசி கெத்து பார் உரிமையாளர் தில்லு

திருப்பூர்:திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, ரங்கநாதபுரம் பகுதி இ.கம்யூ.,வினர், மக்களுடன் இணைந்து, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் அளித்த மனு:கொங்கு மெயின் ரோட்டில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகள் அதிகமுள்ள இடத்தில் இயங்கும் மதுக்கடையை அகற்ற தொடர்ந்து போராடிவருகிறோம். கடந்த மூன்று நாளுக்கு முன், மதுக்கடை இடமாற்றம் செய்யப்படும் என, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.இந்த பலகையை, அடுத்த நாளிலேயே, பார் உரிமையாளர் கழற்றி வீசி விட்டார். மதுக்கடையை சார்ந்துள்ள பார் உரிமம் காலாவதியாகி விட்டது; எவ்வித உரிமமும் இல்லாமல் இயங்கும் பாரை உடனடியாக மூடவேண்டும். பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி, மதுக் கடையை இரண்டு மாதத்துக்குள் இடம் மாற்றம் செய்ய வேண்டும்; இதுகுறித்து மீண்டும் அறிவிப்பு பலகை வைக்கவேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதேபோல், திருப்பூர் - பல்லடம் ரோடு, நொச்சிபாளையம் பிரிவு பொதுமக்களும், மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி, கலெக்டரிடம் நேற்று அளித்த மனு:திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு, நொச்சிபாளையம் பிரிவில் தனியார் கிளப் செயல்படுத்த உள்ளனர்.பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், கிளப் அமைக்க அனுமதி அளிக்க கூடாது. ஏற்கனவே அப்பகுதியில் இருபுறமும் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன; சட்ட ஒழுங்கு பிரச்னைகளை தடுக்கும் வகையில், மதுக்கடைகளை இடம்மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை