உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவருக்கு பாராட்டு

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவருக்கு பாராட்டு

உடுமலை;உடுமலை தளி ரோட்டிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர் கோபால், சமூக பங்களிப்பு பயன்பாட்டின் கீழ், பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த உதவியுள்ளார்.பள்ளி வளாகம் முன்பு, 3.50 லட்சம் ரூபாய் செலவினத்தில் தரைதளத்தில் பேவர்பிளாக் பதிக்கப்பட்டுள்ளது.இதற்கான நிதிஉதவியை வழங்கிய முன்னாள் மாணவருக்கு, பள்ளி தலைமையாசிரியர் அப்துல்காதர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ