| ADDED : ஜன 18, 2024 12:13 AM
அவிநாசி : அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் பிப்., 2ல் நடக்கிறது.பதினைந்து ஆண்டுகளுக்கு பின், நடைபெறும் கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும், 14 தினங்களே உள்ளதால் கோவிலில் அம்மன் சன்னதியை சுற்றிலும் நீராழி பத்தி, இரண்டாம் பிரகாரத்தில் திருமாளிகை பத்தி மண்டபம், 63 பீடம் அமைப்பது உள்ளிட்ட திருப்பணிகளில் ஹிந்து சமய அறநிலையத்துறையினர், அறங்காவலர் குழுவினர், ஆன்மீக அன்பர்கள் உள்ளிட்டோர் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணிகளை நேற்று, கோவை கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பார்வையிட்டார். குறிப்பாக, பிரகாரங்களில் கல் பதித்தல் பணிகள், மடப்பள்ளி, திருமாளிகை பத்தி மண்டபம், காசி கிணறு, யாகசாலை, கொடிமரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து பார்வையிட்டார்.கோவில் அறங்காவலர் பொன்னுசாமி மற்றும்உபயதாரர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.