உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷக ஆண்டு விழா 

ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷக ஆண்டு விழா 

திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிேஷக, 9ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. விஸ்வேஸ்வர சுவாமிக்கு, 108 சங்காபிேஷகம், சண்முக சுப்ரமணியர் மற்றும் விசாலாட்சி அம்மனுக்கு, நவகலச அபிேஷகமும் நடந்தது.ஆதீஸ்வரர் டிரஸ்ட் நிர்வாகிகள், பழநி பாலதண்டாயுதபாணி கோவில் அறங்காவலர் குழு தலை வர் சுப்பிரமணியன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் அறங்காவலர்கள், பக்தர்கள் முன்னிலையில் பூஜைகள் நடந்தன.சிவாச்சாரியார்கள், யாகசாலை பூஜைகளை வேத மந்திரங்கள் முழங்க நடத்தினர். சுவாமிக்கு மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜையும், மகாதீபாராதனையும் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை