உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  இ-பைலிங் முறைக்கு எதிர்ப்பு; வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு 

 இ-பைலிங் முறைக்கு எதிர்ப்பு; வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு 

திருப்பூர்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கூட்டு நடவடிக்கை குழு, இ-பைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உரிய கட்டமைப்பு ஏற்படுத்தவும் வலியுறுத்தி, 8ம் தேதி முதல் வரும் 13ம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பு நடத்த அழைப்பு விடுத்தது. இதனால், திருப்பூர் மாவட்டத்திலும் அனைத்து கோர்ட்களிலும், வக்கீல்கள் மீண்டும் தங்கள் புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் மற்றும் அனைத்து தாலுகா கோர்ட்களிலும் வக்கீல்கள் கோர்ட் நடவடிக்கையில் பங்கேற்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இருப்பினும் நீதிபதிகள், அரசு வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றினர். நேற்று விசாரணைக்கு வந்த வழக்குகள் வேறு தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி