மேலும் செய்திகள்
இலவச சட்ட உதவிக்கு கட்டணமில்லா எண்
05-Oct-2024
திருப்பூர்: மாவட்ட கோர்ட் வளாகத்தில் சட்ட உதவி மையம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், இலவச சட்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் சட்டரீதியான தீர்வுகள் ஏற்படுத்தும் வகையில், இலவச சட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதற்காக, 15100 என்ற இலவச தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் இதுகுறித்து அறிந்து கொள்ளும் வகையில், மாவட்ட கோர்ட் வளாகத்தில், இந்த அறிவிப்பு பலகையை நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் திறந்து வைத்தார். மேலும், இலவச சட்ட உதவி குறித்த விழிப் புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள், செல்லதுரை, ஸ்ரீதர், பத்மா, பிரபாகரன், ராமச்சந்திரன், கண்ணன், சுபஸ்ரீ, செந்தில் ராஜா, முருகேசன், ரஞ்சித்குமார் முன்னிலை வகித்தனர். வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
05-Oct-2024