உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூடுவோம்; கொண்டாடுவோம்!

கூடுவோம்; கொண்டாடுவோம்!

திருப்பூர் காலேஜ் ரோடு, ஸ்ரீஐயப்பன் கோவிலில், 64ம் ஆண்டு மண்டல பூஜை விழா, கடந்த மாதம் துவங்கியது. ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீஐயப்பன் பக்த ஜனசங்கம் சார்பில், விழா ஏற்பாடுகள் விமரிசையாக நடந்தன.நடப்பு ஆண்டில், நவ., 19 முதல், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், அன்னதானம் வழங்கப்பட்டது. ஆங்கில புத்தாண்டு உட்பட, 10 வாரங்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. இதுவரை நடந்த அன்னதான நிகழ்ச்சிகளில், 50 ஆயிரம் பேர் வரை பங்கேற்றுள்ளனர். 64ம் ஆண்டு மண்டல பூஜை விழா அன்னதானம் நேற்றுடன் நிறைவு பெற்றது. நிர்வாகிகள், அன்னதான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், உறுப்பினர் முத்துராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை