உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழில் முனைவோருக்கு இன்று கடன் திட்ட முகாம்

தொழில் முனைவோருக்கு இன்று கடன் திட்ட முகாம்

உடுமலை: தொழில் முனைவோருக்கான கடன் திட்டங்களுக்கான முகாம்,இன்றுநடக்கிறது.தமிழக அரசு, தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை கடன் திட்ட முகாம்களை நடத்த வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளது.மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்படும், திட்டங்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கவும், இக்கடன் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில், மானியத்துடன் இணைந்த கடன் திட்டங்களுக்கான முகாம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்,இன்று (22ம் தேதி)நடத்தப்படுகிறது.புதியதாக தொழில் செய்ய கடனுதவி பெற விரும்பும் தொழில் முனைவோர்கள், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், தொழில் விரிவாக்கம் செய்ய இருப்போர், முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.இத்தகவலை,திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ்தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ