கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற சிவபெருமானை, மும்மையால் உலகாளும் உத்தமன் என, ஆன்றோர்களும், சிவனடியார்களும் பாடி தொழுகின்றனர். அங்கமாய், ஆதியாய், வேதமாகி, அருமறைகளுடன் பஞ்சபூதமாக திகழ்கின்றன சிவபெருமான், அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நீக்கமற நிறைந்திருக்கிறார் அவிநாசி திருத்தலத்தில்.அவிநாசி கோவிலுக்கு வரும் பக்தர்கள், நாடு முழுவதும் உள்ள முக்கிய சிவாலயங்களின் மூலாலய மூர்த்தியை தரிசித்த பலன் கிடைக்கும். ராஜகோபுரத்துக்கு முன்புள்ள மண்டபத்தின் மேற்புறம், சுவரில் வண்ணமயமாக வரையப்பட்டுள்ள, பன்னிரு ஜோதிர்லிங்கத்தையும் தரிசிக்கலாம்.அழகிய தேர் போன்ற வேலைப்பாடுகளுடன், மூலாலய கருவறை, பக்தர்களின் உள்ளத்துயரை நீக்கி, சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, சிவதுர்க்கை அருள்பாலிக்கின்றனர். தட்சிணாமூர்த்தி, தனி சன்னதியில் அமர்ந்து அருட்காட்சி கொடுக்கிறார்.மூன்று நிலைகளுடன், அலங்கரிக்கப்பட்ட தேர்போலவே காட்சியளிக்கிறது, அவிநாசியப்பரின் கருவறை விமானம். ஆடல் அரசனாகிய நடராஜர் - சிவகாமியம்மை, சேரமான் பெருமானுடன், சுந்தரமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரும் கோபுரத்தில் காட்சியளிக்கின்றனர்.விஷ்ணுவுக்குரிய மேற்கு திசையில், நரசிங்கபெருமாள், விஷ்ணு காட்சியளிக்கின்றனர். பார்வதி தேவி, சிவலிங்கத்தை வழிபடும் காட்சியும், வெள்ளையானை லிங்கத்துக்கு அபிேஷகம் செய்யும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.வடக்கு திசையில், தாமரை மலரில் அமர்ந்த நிலையில் பிரம்மா அருள்பாலிக்கிறார். முதலை வாயில் இருந்து வெளிவரும் சிறுவன் வணங்கியபடி இருக்கும் காட்சியும், மற்றொருபுறம் அவனது பெற்றோரும் காட்சியளிக்கின்றனர். அவிநாசி திருத்தலத்தை பொறுத்தவரை, உள்பிரகாரத்தில் இருக்கும் ஒவ்வொரு கற்களும், ஓராயிரம் திருவிளையாடல்களை கூறும் சின்னங்களாக காட்சியளிக்கின்றன.காலத்தில் கணிக்க முடியாத பழமை வாய்ந்தது, கருணாம்பிகை உடனுறையும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். கும்பாபிேஷக பெருவிழா யாகசாலை பூஜைகள், நாளை (29ம் தேதி) முதல் துவங்குகின்றன. பக்தகோடிகள் பரமனை நாடிவந்து, பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசி ஆளுடையாரின் அருளுக்கு பாத்திரராகலாம்!காலத்தில் கணிக்க முடியாத பழமை வாய்ந்தது, கருணாம்பிகை உடனுறையும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், கும்பாபிேஷக பெருவிழா யாகசாலை பூஜைகள், நாளை (29ம் தேதி) முதல் துவங்குகின்றன