உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சிறுமியுடன் திருமணம் : வாலிபர் மீது போக்சோ

 சிறுமியுடன் திருமணம் : வாலிபர் மீது போக்சோ

திருப்பூர்: தர்மபுரியை சேர்ந்தவர் குழந்தைவேல், 31. கடந்த, இரு ஆண்டுக்கு முன், திருப்பூரில் தங்கி வேலை செய்யும் போது, 17 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டது. இது, காதலாக மாறி திருமணம் செய்தனர். நிறை மாத கர்ப்பிணியாக, சிறுமி திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்தது. டாக்டர்கள் விசாரணையில், 18 வயது பூர்த்தியாகாதது குறித்து தெரிய வந்தது. கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். குழந்தை திருமணம் செய்து, அத்துமீறலில் ஈடுபட்ட குழந்தைவேல் மீது 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி