உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ காரணப்பெருமாள் கோவிலில் மாசி மக தேர்த்திருவிழா

ஸ்ரீ காரணப்பெருமாள் கோவிலில் மாசி மக தேர்த்திருவிழா

அவிநாசி:அவிநாசி, பெரிய தேர் நிலையம் அருகிலுள்ள ஸ்ரீ காரணப்பெருமாள் கோவிலில் மாசி மகம் தேர் மற்றும் கவ்வாளம் திருவிழா துவங்கியது.கோவிலில், கடந்த 18ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 23ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நேற்று காலை, தேவியருடன், காரணப்பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவில், இன்று பரிவேட்டை, கவ்வாளம் உற்சவம், கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா காட்சி மற்றும் நாளை மஞ்சள் நீர் விழாவும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ