உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ம.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திருப்பூர்;மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்படாததைக் கண்டித்தும், 'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், ம.தி.மு.க., மாநகர மாவட்டம், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில், குமரன் சிலை முன், ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. புறநகர வடக்கு மாவட்ட பொருளாளர் ரவி வரவேற்றார். செயலாளர் மணி முன்னிலை வகித்தார்.திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கட்சியின், மாநில அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ் பேசுகையில்,''எதற்கெல்லாம் வரி விதிக்க முடியுமோ அனைத்து விதித்து வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நிலச்சரிவு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிற்கதியாகி உள்ள கேரளாவுக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும்,'' என்றார்.மாநில மகளிரணி செயலாளர் சாந்தாமணி, இளைஞரமணி மாநில துணை செயலாளர் ரத்தினசாமி, திருப்பூர் புறநகர தெற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன் உட்பட பலர் பேசினர்.--நிட்ேஷா துவக்கம்திருப்பூர், ஆக. 10-திருப்பூர், காங்கயம் ரோடு, 'டாப் லைட்' மைதானத்தில், 22வது 'நிட்ேஷா' கண்காட்சி நேற்று துவங்கியது. ஐந்து மெகா அரங்குகளில் அமைந்துள்ள, 400 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.அமெரிக்கா, சீனா, ஜப்பான், தைவான், கொரியா, போர்ச்சுக்கல், போலந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பின்னலாடை இயந்திர தயாரிப்பு நிறுவனங்கள், இயந்திரங்களைக் காட்சிப்படுத்தியுள்ளன. துவக்க நாளான நேற்றே தொழில்துறையினரும், தொழில் முனைவோரும் அதிகளவில் ஆர்வம்பொங்கப் பார்வையிட்டனர்.நுாலிழையை பின்னல் துணியாக மாற்றும் நவீன 'நிட்டிங்' இயந்திரங்கள்; பின்னல் துணிக்கு சாயமிடும் 'இங்க்' வகைகள்; மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்திக்கு கைகொடுக்கும் 'டிஜிட்டல் பிரின்டிங்' இயந்திரங்கள்; 'பிரின்டிங் இங்க்' வகைகள்; எலாஸ்டிக் உற்பத்தி இயந்திரங்கள்;எலாஸ்டிக் இணைப்பு இயந்திரம் மற்றும் பின்னலாடை உற்பத்தியில், புதிதாக அறிமுகமாகியுள்ள தையல் இயந்திரங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர், ஒவ்வொரு இயந்திரத்தையும் இயக்கி பார்க்கும் வசதிகளுடன் நிறுவப்பட்டுள்ளன.

பலவகை இயந்திரங்கள்

தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பின்னலாடைத்துறையின் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் தேவையான, தானியங்கி இயந்திரங்கள் அதிகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, 'லேபிள்' வகைகள்; நவீன 'பாலிபேக்', மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்திக்கான, பிரின்டிங் மெட்டீரியல்கள், ஸ்டிக்கர் பிரின்டிங் பொருட்கள், 'ரோப்', மக்கும் தன்மையுடன் கூடிய 'டேக்' வகைகள், சோலார் கட்டமைப்பு இயந்திரங்கள்; 'லேசர் கட்டிங்' இயந்திரங்கள், ஆடைகளை அயர்ன் செய்து, மடித்து கொடுக்கும் இயந்திரங்கள் இடம்பெற்றுள்ளன.

உள்ளூர் தயாரிப்பு இயந்திரங்கள்

கடந்த சில ஆண்டுகளாக, 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் துவங்கப்பட்ட நிறுவனங்கள், நவீன டிஜிட்டல் பிரின்டிங்' மெஷின்களை காட்சிக்கு வைத்துள்ளன.இத்தகைய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளன. முதல் நாளான நேற்றே, தொழில்துறையினர், மாணவ, மாணவியர் ஆர்வமாக பார்வையிட்டு வருகின்றனர். விடுமுறை நாளான நாளை, பார்வையாளர்கள் அலைமோதும் என்பதால், அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சி நேரம்

கண்காட்சி, காலை, 10:00 மணிக்கு துவங்கி, இரவு 7:00 மணி வரை நடக்கும். வரும், 11ம் தேதி மாலை வரை கண்காட்சி நடைபெறும்.-----நிட்ேஷாவில் அதிநவீன இயந்திரங்கள்தொழில்துறையினர் வரவேற்புதிருப்பூர், ஆக. 10-பின்னலாடை தொழிலின் அனைத்து துறையினருக்கும் தேவையான அதிநவீன இயந்திரங்களின் அணிவகுப்பாக, 'நிட்ேஷா' கண்காட்சி அமைந்துள்ளதாக, தொழில் அமைப்பினர் வரவேற்றுள்ளனர். காலத்திற்கேற்ப தானியங்கி இயந்திரங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.திருப்பூர் காங்க யம் ரோடு, ஹவுசிங் யூனிட் அருகே, 'டாப் லைட்' மைதானத்தில், 22வது 'நிட்ேஷா' கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சி அரங்குகளைத் தொழில்துறையினர் பார்வையிட்டனர். அவர்கள் கூறியதாவது:

அனைவரும்பார்வையிட வேண்டும்

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன்:நிட்ேஷா கண்காட்சி, சீனா, ஐரோப்பாவில் நடப்பதுபோல், எழுச்சியுடன் திருப்பூரில் துவங்கியுள்ளது. தொழில்துறையினர் மட்டுமல்லாது, தொழிலாளர்களும் கண்காட்சியை பார்வையிட வேண்டும். அனைத்து நிறுவனங்களும், கடை நிலை ஊழியர் வரை, நேரில் வந்து கண்காட்சியை பார்வையிட ஏற்பாடு செய்ய வேண்டும். பிரின்டிங் இயந்திரங்கள் அதிக அளவு இருந்தாலும், அனைத்து இயந்திரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

வெளிநாடு செல்லாமல் இங்கேயே...

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன்:வெளிநாடு சென்று கண்காட்சியை பார்க்க அதிக செலவாகும். திருப்பூர் தொழில்துறையினர் பயன்பெறும் வகையில், நிட்ேஷா கண்காட்சி நடத்தப்படுகிறது. எல்லோரும், அமெரிக்கா, ஐரோப்பா கண்காட்சிக்கு சென்று பார்க்க முடியாது; திருப்பூரில் நடைபெற உள்ள கண்காட்சியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆட்டோமேஷன்இயந்திரங்கள் தேவை

பின்னல் துணி உற்பத்தியாளர் (நிட்மா) சங்க தலைவர் ரத்தினசாமி:வங்கதேசத்தில் நடந்த குழப்பத்தால், வெளிநாட்டு வர்த்தகர்கள், இந்தியாவுக்கு மாறலாம் என்று விரும்புகின்றனர். திருப்பூருக்கும் சாதகமாக மாறியுள்ளது; இந்நிலையில், இக்கண்காட்சி நடத்துவது ஊக்குவிப்பாக அமையும்.ஐரோப்பா, சீனா, அமெரிக்காவுக்கு சென்று பார்வையிட்டு வருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. வெளிநாட்டுக் கண்காட்சியை பார்த்தது போல், திருப்பூரில் கண்காட்சி நடத்துவது மகழ்ச்சியாக இருக்கிறது; அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அதிவேக நிட்டிங் இயந்திரம் வந்துவிட்டது; தானியங்கி (ஆட்டோமேஷன்) இயந்திரம் வந்தால் மட்டுமே தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். இக்கண்காட்சியில், அதிகளவில் தானியங்கி இயந்திரங்கள் வந்துள்ளன.

நன்னீர் ஓடும்நொய்யலாறு

திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன்:ஒவ்வொரு ஆண்டும், தொழில்நுட்பம் 'அப்டேட்' ஆகிக்கொண்டே இருக்கிறது. புதிய இயந்திரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. சாயத்தொழிலில், பல்வேறு இயந்திரங்கள் வந்துள்ளன. சாயத்தொழில் மேம்பாட்டுக்காக, தேவையான பயிற்சி அளிக்கும் மையம் துவங்கியுள்ளோம்.முன்பு செய்த தவறுகளுக்கு பிராய்ச்சித்தம் செய்தது போல், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை பின்பற்றி வருகிறோம். அதன் பயனாக, மீண்டும் ஆற்றில் நன்னீர் ஓடுவதாக, விவசாயிகளே பாராட்டியுள்ளனர். மேலும் சில இடங்களில் குளறுபடி இருந்தாலும், எதிர்காலத்தில் முழுமையாக சீராக்கப்படும்.

ஜவுளி ஆராய்ச்சி மையம் வேண்டும்

திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம்:திருப்பூர் எந்தவொரு நிலையில் இருந்தாலும், 'நிட்ேஷா' கண்காட்சி தடையின்றி நடந்து வருகிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், 'சைமா' தலைமையில், நிரந்தர கண்காட்சி மையம், ஜவுளி ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். அரசை மட்டுமே நம்பியிருக்காமல், தொழில்துறையினர் கிளஸ்டர் அமைத்து, அரசு வழிகாட்டுதலுடன் முயற்சிக்கலாம்.

'டிஜிட்டல்' பிரின்டிங் வளர்ச்சி

திருப்பூர் நிட்பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த்:ஒவ்வொரு ஆண்டும், கண்காட்சியில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது. நிட்ேஷா என்பதை 'பிரின்ட்ேஷா' என்று கூறும் வகையில், பிரின்டிங் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளனர். மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பில் பிரின்டிங் முக்கியம் என்பதை உணர்த்தியுள்ளனர்.சீனாவில்தான் டிஜிட்டல் தொழில்நுட்பம் அதிகம் இருக்கிறது; தற்போது இந்தியாவில் வந்துள்ளது. உள்நாட்டிலேயே, 'டிஜிட்டல்' பிரின்ட் தயாரிக்கும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளோம். 'டிஜிட்டல்' இங்க்கை இந்தியாவில் தயாரிக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளோம். 'ஸ்கிரீன் பிரின்டிங்' செலவு அதிகமாகிறது; டிஜிட்டல் பிரின்டிங் வளர்ந்தால் உற்பத்தி குறையும். மதிப்பு கூட்டிய ஆடை உற்பத்திக்கு, இக்கண்காட்சி பேருதவியாக இருக்கும்.

மறுசுழற்சி நுால், துணிக்கு வரவேற்பு

தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் சங்க (சிம்கா) தலைவர் விவேகானந்தன்:நிட்டிங் பிரிவுக்கு அதிநவீன இயந்திரங்கள் வந்துள்ளன. மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்திக்கு தேவையான நவீன இயந்திரங்கள் அதிகம் வந்துள்ளன. மறுசுழற்சி நுால், துணி மற்றும் ஆடைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது; அதுதொடர்பான ஸ்டால்களும் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது. நிட்ேஷா கண்காட்சியை பொறுத்தவரை, திருப்பூரின் தேவைகளை பூர்த்தி செய்யும் இயந்திரங்களை இறக்கியுள்ளது. அனைவரும் வந்து பார்க்க வேண்டும்.

அடிக்கடி கண்காட்சிகள் அவசியம்

திருப்பூர் தொழில் கூட்டமைப்பு (டிப்) தலைவர் மணி:பின்னலாடை 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதிரி பாகங்களும், கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. நிட்ேஷா கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்; அடிக்கடி இக்கண்காட்சி நடத்தப்பட வேண்டும்.நிரந்தரக் கண்காட்சிவளாகம் அமையுமா?திருப்பூரில் இயந்திரங்கள் இடம்பெறும் வகையிலான கண்காட்சிகளை நடத்த நிரந்தர வளாகம் இல்லை. கோவை 'கொடிசியா' போன்று வளாகம் அமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. நிரந்தரக் கண்காட்சி வளாகம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கு அரசு உதவ வேண்டும் என்றும் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வரைச் சென்று சந்திக்கலாம் என்று 'சைமா' தலைவர் ஈஸ்வரன் யோசனை தெரிவித்தார்.---வினாடி வினாதிருப்பூர்:திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அறிக்கை: 'தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா' என்ற ஊக்கத்தொகை திட்டத்துக்கு தபால்தலை சேகரிப்பு கணக்கு வைத்துள்ள ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இணைந்தவர்களுக்கு வினாடி வினா எழுத்துத் தேர்வு, வரும், செப்., 28ம் தேதி அகில இந்திய அளவில், நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ஒரு ஆண்டுக்கு மாதம், 500 ரூபாய் வீதம் அவரவர் தபால் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க செப்., 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு: 04212239785; otirupur.tn. tgov.in----தேசியக்கொடி விற்பனைதிருப்பூர், ஆக. 10-திருப்பூர் தபால் கோட்டத்தில் உள்ள, அனைத்து தபால் அலுவலகங்களிலும், தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கொடியின் விலை 25 ரூபாய்.திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அறிக்கை:நாட்டின், 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூர் தபால் கோட்டத்தில் உள்ள, அனைத்து தபால் அலுவலகங்களிலும், தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கொடியின் விலை ரூ. 25. தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகங்களில், தேசியக்கொடிகளை வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் தேசிய கொடிகள் வாங்க விரும்புவோர், dotirupur.indiapos t.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து, தபால்காரர் முலம் வீட்டில் இருந்தபடியேயும் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.----சுய உதவிக்குழுவில் கையாடல்தலைவி மீது புகார்அவிநாசி, ஆக. 10-சேவூர் அருகே பொங்கலுாரில் மகளிர் சுய உதவிக் குழுவில், 12 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக, குழு தலைவி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.அவிநாசி ஒன்றியம், பொங்கலுார் ஊராட்சி, தாசராபாளையம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மனைவி துளசிமணி. மகளிர் சுய உதவிக் குழு தலைவி. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், அப்பகுதியைச் சேர்ந்த, 4 குழுக்களுக்கு, தலா, 12 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம், 48 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளார்.'ஒரு குழுவுக்கு தவறுதலாக பணம் வந்து விட்டது. பணத்தை திருப்பி கட்டுங்கள்' என்று கூறி, துளசி மணி கூறியதால், குழு உறுப்பினர்கள்,12 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளனர். பணத்தை துளசிமணி வாங்கி வைத்துள்ளார்.இந்நிலையில், வங்கியிலிருந்து மகளிர் சுய உதவிக்குழு பெண் உறுப்பினர்களுக்கு பணம் கட்டாதது குறித்து தகவல் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த சிலர், வங்கியில் விவரம் கேட்டபோது, துளசிமணி, 12 லட்சம் ரூபாயை கையாடல் செய்தது தெரியவந்தது.இதனால், 50க்கும் மேற்பட்ட பெண்கள் சேவூர் போலீஸ் ஸ்டேஷனில் துளசிமணி மீது புகார் அளித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 'கையாடல் செய்த பணத்தை விரைவில் வங்கியில் செலுத்தி விடுவதாக ஒப்புக்கொண்டு,' எழுத்துப்பூர்வமாக போலீசாரிடம் கடிதம் அளித்தார். இதனால், பெண்கள் கலைந்து சென்றனர்.-----இஎஸ்ஐ திட்டப்பயன்தொழிலாளர் அறிவது அவசியம்பல்லடம், ஆக. 10--நாகர்கோவிலைச் சேர்ந்தவர் திருநீலகண்டன், 28. மனைவி சந்தியா, 22. பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சர்வீஸ் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த திருநீலகண்டன், கடந்த ஆண்டு பிப்., மாதம் வாகன விபத்தில் உயிரிழந்தார்.பல்லடம் இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருநீலகண்டனின் மனைவி சந்தியாவிடம், 1,23,950 ரூபாய் உதவி தொகை; மாதந்தோறும், 15,240 ரூபாய் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை ஆகியவற்றை கோவை மண்டல உதவி இயக்குனர் பெருமாள் வழங்கினார். அலுவலக மேலாளர் ராஜா, காசாளர் ஜெயகுமார், அலுவலர் சவுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உதவி இயக்குனர் கூறுகையில், 'மாதம், 21 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறும் தொழிலாளர்கள் அனைவரும் இ.எஸ்.ஐ., சமூக பாதுகாப்பு பயன்கள் பெற உரிமையுள்ளவர்கள். இ.எஸ்.ஐ., காப்பீட்டில் உள்ள நபர் பணியின் போது விபத்தில் இறந்தால், காப்பீட்டாளரை சார்ந்துள்ள குடும்பத்துக்கு உதவி பயன் வழங்கப்படும். அவரது மனைவி மற்றும் பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும்; ஆண் குழந்தைகளானால், 25 வயது வரையும், பெண் குழந்தைகளானால் திருமணமாகும் வரையும் சார்ந்தோர் உதவி பயன் கிடைக்கும். இ.எஸ்.ஐ., காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ள தொழிலாளர்கள் இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்' என்றார்.-----சட்ட நகல் எரிப்பு போராட்டம்மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன்பும், திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பும், இந்திய கம்யூ., கட்சியினர் சட்ட நகல் எரிக்கும் போராட்டத்தை நடத்தினர். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நதியா தலைமை தாங்கினார். அவிநாசி ஒன்றிய செயலாளர் முத்துசாமி, துணை செயலாளர் கோபால், வழக்கறிஞர் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகல்களை எரிக்கவிடாமல் போலீசார் தடுத்தனர்.---பாம்புபிடி வீரருக்கு சோதனைபொங்கலுார், ஆக. 10--பொங்கலுார் ஒன்றியம், சின்னாரியபட்டியை சேர்ந்தவர் சண்முகம், 42. எங்கு பாம்பு இருக்கிறது என்று தகவல் கிடைத்தால், விரைந்து சென்று அந்தப் பாம்பை லாவகமாக பிடித்து, காட்டுப் பகுதியில் விட்டுவிடுவார். நேற்று முன்தினம் பொங்கலுார் அருகே முதியா நரைச்சலை சேர்ந்த விவசாயி ஒருவர் தோட்டத்து கிணற்றில் நாகப்பாம்பு இருப்பதாக தகவல் கொடுத்தார். அங்கு சென்ற சண்முகம் பாம்பை பிடித்து மேலே கொண்டு வந்தார். அப்பொழுது, எதிர்பாராத விதமாக அவரை பாம்பு கடித்து விட்டது.வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் மயக்கமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாம்பு பிடி வீரருக்கு ஏற்பட்ட துயரம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.---வீடுகள் அதிர்ந்தனதிருப்பூர், ஆக. 10-காங்கயத்தில் நேற்று காலை, 10:05 மணியளவில் திடீரென பலத்த வெடிச்சத்தம் கேட்டது. வீடுகள் மற்றும் கட்டடங்கள் அதிர்ந்தன.சுற்றுவட்டார பகுதியை பெரும்பாலான மக்களுக்கு இந்த சத்தம் கேட்டது. கடந்த சில மாதங்களில், இரண்டு அல்லது மூன்று முறை இதுபோல் பலத்த சத்தத்துடன் வெடிச்சத்தம் கேட்கிறது. எந்த இடத்திலிருந்து வந்தது என்பது மட்டும் தெரியாமல் தொடர்ந்து மர்மமாக உள்ளது. கிரஷர்களில் வெடி சத்தமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.---மண் கடத்தலில் மாபியா கும்பல்திருப்பூர்:தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி கூறியதாவது:வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதியை வைத்துக்கொண்டு, பல நுாறு லோடு நீர்நிலைகளில் கிராவல் மண் அள்ளப்படுகிறது. ஒரு லோடு, 4 ஆயிரம் ரூபாய்க்கு பகிரங்கமாக விற்கின்றனர். உடுமலை, குடிமங்கலம், பெரிய வாழப்பாடி, பல்லடம், அனுப்பட்டி, கரடிவாவி, புளியம்பட்டி, கிருஷ்ணாபுரம் ஆகிய நீர் நிலைகளில் வண்டல் மண் இல்லை. அங்கு கிராவல் மண்ணை அள்ளி மண் மாபியா கும்பல் சட்ட விரோதமாக விற்பனை செய்கிறது. கலெக்டரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மாவட்டம் முழுவதும் வண்டல் மண் இல்லாத இடங்களில், அரசால் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.----அம்மன் கோவிலில் கோலாகலம்திருப்பூர், ஆக. 10-ஆடிவெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது.ஆடி வெள்ளிக்கிழமை, அம்மன் கோவில்களில், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள், அன்னதானம் நடந்து வருகிறது.நான்காவது ஆடி வெள்ளியான நேற்று, திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில், டவுன் மாரியம்மன் கோவில், போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாரியம்மன் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில், ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில் என, அனைத்து அம்மன்கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.மஞ்சள் நீர், சந்தனம், பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகமும், அலங்கார பூஜையும் நடந்தது. பக்தர்கள் ராகிக்கூழ் எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அம்மனுக்கு, கண்ணாடி வளையல் அலங்காரம், ரூபாய் நோட்டு அலங்காரம், காய்கறி அலங்காரம் என, பல்வகை அலங்கார பூஜைகள் செய்து, பக்தர்கள் வழிபட்டனர்.புதுப்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில், கிளி வாகனத்தில் அமர்ந்த மீனாட்சி அம்மன் அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலித்தார். பெண்கள் விரதமிருந்து அம்மனை வழிபடுவது வழக்கம்; இதையொட்டி கோவில்களில், நேற்று மதியம் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.-----ஆதரவு கோர திட்டம்திருப்பூர், ஆக. 10-கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மறைந்த முன்னாள் தலைவர் என்.எஸ்.பழனிசாமிக்கு பொங்கலுார், நாதகவுண்டம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் திறப்புவிழா வரும் 18-ல் நடக்கிறது. திறப்பு விழாவில் பங்கேற்க அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி சம்மதித்துள்ளார். கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான ஆனைமலையாறு -- நல்லாறு திட்டம் நிறைவேற்றக் கோரியும், அதன் முக்கியத்துவம் குறித்தும் விவசாயிகள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியவர் என்.எஸ்.பழனிசாமி. இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் ஊர் தோறும் பெயர் பலகை திறந்தும், தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்தும் வருகின்றனர். மணிமண்டபம் திறப்பு விழாவுக்கு வரும் பழனிசாமியிடம் இத்திட்டத்திற்கான ஆதரவைக் கோர திட்டமிட்டுள்ளனர்.---அழிந்த தரவுகள்; தவிப்பில் தொழிலாளர்கள்திருப்பூர், ஆக. 10-அழிந்துபோன தரவுகளை மீண்டும் பதிவு செய்ய வேண்டியுள்ளதால், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.தொழிலாளர் நலத்துறையின் கீழ், கட்டுமானம், உடல் உழைப்பு, ஆட்டோ, தெருவோர வியாபாரிகள், கடை ஊழியர், வாகன ஓட்டுனர் மற்றும் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலவாரியம் உள்பட, 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் செயல்படுகின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ளனர்.நலவாரிய பதிவு ஆன்லைனில் நடைபெறுகிறது. தொழிலாளர்கள், ஆதார், ரேசன் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், மொபைல் எண் ஆகிய விவரங்களுடன், தொழிற்சங்க பிரதிநிதிகள், வி.ஏ.ஓ., சான்றுபெற்று, இ-சேவை மையங்கள் மூலமாக வாரியத்தில் பதிவு செய்து, அடையாள அட்டை பெறுகின்றனர்.நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர் மற்றும் குடும்பத்துக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, விபத்து மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகிறது.கடந்த 2023, டிசம்பர் மாதம் சென்னையில் பெய்த கன மழையால், தொழிலாளர் நலவாரிய சர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர்களின் தரவுகள் அழிந்துவிட்டதாக நலவாரியம் தெரிவித்துள்ளது.இதனால், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு, வாரியம் சார்ந்த பயன்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நலவாரியம் துரிதமாக செயல்பட்டு, தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவேண்டும் என திருப்பூர் தொழிற் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்துகின்றனர்.

அவ்வளவு எளிதல்ல

சி.ஐ.டி.யு., பனியன் தொழிற் சங்க மாவட்ட செயலாளர் சம்பத்:தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த 45 லட்சம் தொழிலாளரின் தரவுகள் அழிந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். அதனால், நலவாரிய பதிவு புதுப்பித்தல், உதவித்தொகைகள், ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்க முடி யாத நிலைக்கு தொழிலாளர் தள்ளப்பட்டுள்ளனர்.தொழிலாளர்கள், முதல் பதிவின்போது வழங்கிய அனைத்து ஆவணங்களோடு, நலவாரியத்தில் மீண்டும் பதிவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 45 லட்சம் தொழிலாளர் தரவுகளை மீண்டும் பதிவு செய்வது அவ்வளது எளிதானது அல்ல.ஏற்கனவே நலவாரிய சர்வர் அடிக்கடி முடங்கிவிடுகிறது. வாரியத்தில் பதிவு செய்வதற்காகவும், உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்காகவும் தொழிலாளர்கள் இ-சேவை மையங்களுக்கு இரண்டு மூன்று நாட்கள் அலைந்துகொண்டிருக்கின்றனர். ஒரு தொழிலாளியின் ஆவணத்தை பதிவு செய்வதற்கு, 40 நிமிடம் முதல் ஒரு மணி நேரமாகிவிடுகிறது.

அலைச்சல்...மன உளைச்சல்

தமிழகம் முழுவதும் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர் அனைவரின் விவரங்களையும் மீண்டும் பதிவு செய்யும்போது, சர்வர் கோளாறுகள், தொழிலாளருக்கு வீண் அலைச்சல் மற்றும் மன உளைச்சல் ஏற்படும்.வாரிய பதிவின்போது, வெப் கேமரா மூலம் தொழிலாளரின் லைவ் புகைப்படம் எடுக்கப்படும். பதிவு செய்து அட்டை பெற்ற ஒரு தொழிலாளி, இடைப்பட்ட நாட்களில் இறந்துவிட்டால், மீண்டும் பதிவு செய்ய முடியாது; இதனால், அந்த தொழி லாளியின் குடும்ப உறுப்பினர்கள், ஈமக்கிரியை, விபத்து மரண உதவித் தொகைகளுக்கு விண்ணப்பிக்க முடியாத பெறமுடியாது.நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களை கண்டறிந்து மீண்டும் பதிவு செய்வது தொழிற்சங்கங்களால் இயலாததாகிறது. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை பதிவு புதுப்பிக்கும்போது அல்லது உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்கும்போது, அழிந்த தரவுகளை மீண் டும் பதிவேற்றம் செய்யுமாறு வாரிய அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.இதனால், ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் நலவாரிய பதிவை இழக்க நேரிடும். ஓய்வூதியம் உள் பட உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவர்.ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிப்பது குறித்து நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நலவாரிய அலுவலகங்களிலேயே, தொழிலாளர் விவரங்களை மீண்டும் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும்.ஏற்கவே முடியாதுஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் சேகர்:தொழிலாளர் நலவாரிய பதிவுகளை தனியார் நிறுவனம் பராமரித்துவருகிறது. திடீரென தரவுகள் அனைத்தும் அழிந்துபோய்விட்டதாக கூறுவதை ஏற்கமுடியாது. தமிழக அரசு தனிக்குழு அமைத்து, இது தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும். அழிந்த தரவுகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவேண்டும்.திருப்பூர் மாவட்டத்தில் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர் உள்ளனர். ஆனால், 1.30 லட்சம் பேர் மட்டுமே வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தி, அமைப்புசாரா தொழிலாளர் அனைவரையும் வாரியத்தில் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.தமிழகம் முழுவதும் நலவாரிய பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டிருக்கவேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் வெறும் 17 பேருக்கு மட்டுமே வீடு கொடுக்கப்பட்டுள்ளது. சிக்கலான விதிமுறைகளே இதற்கு காரணம். விதிமுறைகளை தளர்த்தி, வாரியத்தில் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர் அனைவருக்கும் வீடு கிடைக்கச் செய்யவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை