உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முருங்கைக்காய் வரத்து சரிவு ;கிலோ ரூ.110க்கு விற்பனை

முருங்கைக்காய் வரத்து சரிவு ;கிலோ ரூ.110க்கு விற்பனை

உடுமலை;உடுமலை உழவர்சந்தைக்கு, உடுமலை, மடத்துக்குளம் பகுதி சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, விவசாயிகள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மழைப்பொழிவு காரணமாக, உழவர்சந்தைக்கு, காய்கறிகள் வரத்து குறைந்து காணப்பட்டது. தக்காளி, சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்து வரும் நிலையில், முருங்கைக்காய் வரத்து குறைவு காரணமாக, விலை கடுமையாக உயர்ந்துள்ளது.உடுமலை உழவர்சந்தையில், நேற்று தக்காளி விலை, கிலோ ரூ. 22 முதல் 26 வரையும், உருளைக்கிழங்கு, 40 - 50 வரையும், சின்னவெங்காயம், 30 - 40 வரையும், பெரியவெங்காயம், 32 - 36 வரையும், மிளகாய், 60 - 70 வரையும், கத்தரிக்காய், 25 - 30 வரையும், வெண்டைக்காய், 25 - 30 வரையும்,முருங்கைக்காய், 100 - 110 வரையும், பீர்க்கங்காய், 60 - 65 வரையும், சுரைக்காய், 15 - 20 வரையும், புடலங்காய், 25 - 35 வரையும், பாகற்காய், 45 - 50 வரையும், தேங்காய், 34 - 36 வரையும், முள்ளங்கி, 30 - 36 வரையும், பீன்ஸ், 45 - 48 வரையும், அவரைக்காய், 35 - 45, கேரட், 45 - 55, வாழைப்பழம் 30 - 60 ரூபாய்க்கும் விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !