உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாதா, பிதாவுக்கு அடுத்து மருத்துவர்

மாதா, பிதாவுக்கு அடுத்து மருத்துவர்

பல்லடம்:சுல்தான்பேட்டையில், மருத்துவ சேவை செய்து வரும் மருத்துவர் புருஷோத்தமனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா, சுல்தான்பேட்டையில் நடந்தது. கோவை வின்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் சுந்தர வடிவேலு தலைமை வகித்தார். மாவட்ட இயக்குனர் கோகுல்ராஜ், துணை கவர்னர் வெங்கட், தேவசேனாதிபதி, எம்.எல்.ஏ., கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி தலைவர் விஜய பிரகாஷ் வரவேற்றார்.கோவை கே.ஜி., மருத்துவமனை தலைவர் பக்தவச்சலம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:ஒவ்வொரு வெற்றியாளனுக்கு பின்னும் மனைவி இருக்கிறார். நல்ல மனைவி அமைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். மாதா, பிதா, மருத்துவர், செவிலியர், மனைவி இதன் பிறகுதான் தெய்வம். வாழ்க்கையில் மனைவி முக்கியம். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும். வாழ்க்கை என்பது அன்பளிப்பு. நாளை இருப்போமா, இல்லையா என்று தெரியாது. இந்தியாவில், 140 கோடி மக்களில் 15 கோடி மக்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளது. மது அருந்திவிட்டு மருத்துவமனைக்கு லட்சக்கணக்கில் செலவழிக்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !