உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜில்லுன்னு தாகம் தணிக்க மண் பானைகள்

ஜில்லுன்னு தாகம் தணிக்க மண் பானைகள்

திருப்பூர்; கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில், திருப்பூரில் மண் பானைகள், விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், மித வெப்ப பகுதியான திருப்பூர் நகரிலும், கோடையின் தாக்கம் தலைதுாக்க துவங்கியிருக்கிறது. மாவட்டத்தின் பல இடங்களில், கோடை வெப்பம் துவங்கியுள்ளது; சில நாட்களில், வெயில் சுட்டெரிக்கும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.வழக்கத்தை காட்டிலும், இந்தாண்டு, 2, 3 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.உடல் உஷ்ணம் தவிர்க்க, தர்பூசணி, இளநீர், பழச்சாறு ஆகியவற்றை மக்கள் வாங்க துவங்கியிருப்பதால், ஆங்காங்கே கடைகள் முளைத்துள்ளன.அதே போன்று, கோடை வெயிலுக்கு இயற்கையான முறையில் குளிர்ச்சியான குடிநீர் பருக வகை செய்யும் மண் பானை விற்பனையும் துவங்கியுள்ளது. திருப்பூரில் தாராபுரம் ரோடு, பாண்டியன் நகர் உள்ளிட்ட இடங்களில் பானை விற்பனையில் வியாபாரிகள் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.குறைந்தபட்சம், 300 ரூபாய் முதல், 700 ரூபாய் வரை பானைகள் விற்கப்படுகின்றன. வெறும் பானை மட்டுமின்றி, பொது மக்களை ஈர்க்கும் வகையில், உருளை வடிவ பானைகள், குழாய் பதிக்கப்பட்ட பானைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை