உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழந்தைகள் பாதுகாப்புக்கு நகராட்சியில் குழு கூட்டம்

குழந்தைகள் பாதுகாப்புக்கு நகராட்சியில் குழு கூட்டம்

உடுமலை; உடுமலை நகராட்சி அலுவலகத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், நகராட்சி தலைவர் மத்தீன் தலைமையில் நடந்தது. குழந்தைகளின் பாதுகாப்பு குழு செயலாளர் மற்றும் நகராட்சி கமிஷனர் விநாயகம் முன்னிலை வகித்தார். இதில், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் தடுப்பு, குழந்தைகளை தவறாமல் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குழந்தை பிறப்பு பதிவு, ஆதார் அட்டை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும், குழந்தைகளுக்கு காலம் தவறாது தடுப்பூசி போடுதல் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்தல், பத்தாம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்வதை உறுதிப்படுத்துதல், ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத கிராமங்களை உறுதி செய்தல் உள்ளிட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நகராட்சி துணைத் தலைவர் கலைராஜன், குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் அர்ஜுனன், மஞ்சுளா, ஜெயந்தி, சமூக நலத்துறை அலுவலர் சரளா, தொழிலாளர் அமைப்பு உதவியாளர் ராஜமுருகன், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை விஜயா, சுகாதார ஆய்வாளர்கள் செல்வம், சிவக்குமார், செல்வகுமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை