| ADDED : ஜன 26, 2024 11:36 PM
உடுமலை: மடத்துக்குளம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சர்க்கார் கண்ணடிப்புத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், 'பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பெண்களின் முன்னேற்றம், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சட்டங்கள்' குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.இம்முகாமிற்கு மடத்துக்குளம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயகுமார் தலைமை வகித்து பேசியதாவது:பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் அனைவரும் சமூகத்தில் தங்களை சுற்றி நடக்கும் குற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.புகையிலை போன்ற போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட வேண்டாம். 18 வயது பூர்த்தி அடையாமலும், ஓட்டுநர் உரிமம் பெறாமலும் வாகனங்களை இயக்கக்கூடாது.பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மதித்து நடக்க வேண்டும். நன்கு படித்து நற்பெயர் பெற வேண்டும், விளையாட்டு, ஓவியம், நடனம், தற்காப்பு போன்ற கூடுதல் கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்.பெண் குழந்தைகளின் பாதுகாப்பில், ஆண் குழந்தைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர்கள் தான் அரணாக இருந்து பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.இதில், பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.