திருப்பூர்;திருப்பூர் ரேவதி மருத்துவமனை அறிக்கை:திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் மூளை நரம்பியல் மற்றும் பக்கவாத சிகிச்சையை முழு நேரம் மேற்கொள்ளும் வகையில், நிபுணர் டாக்டர்சிவகுமார், புதியதாக இணைந்துள்ளார்.இவர், காலை, 9:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, மாலை, 5:00 முதல், இரவு, 9:00 மணி வரையும், அவசர சிகிச்சைகளுக்கு, 24 மணி நேரமும் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குவார். மூளை, நரம்பு பிரச்னைகள், பக்கவாதம், முக வாதம், வலிப்பு நோய், தலைக்காயம், தலைசுற்றல், மூளையில் ரத்தக்கட்டு மற்றும் ரத்தக்கசிவு, கோமா நிலை சிகிச்சை, நரம்பு தளர்ச்சி, ஒற்றைத் தலைவலி, நீண்ட நாள் தலைவலி, மூளை நரம்பு, முதுகுத்தண்டுவடம், இடுப்பு பிரச்னை, சாலை விபத்து போன்ற நரம்பியல் பிரச்னைகளுக்கு சிகிச்சை வழங்கவுள்ளார்.திருப்பூர் மாவட்டத்திலேயே ரேவதி மருத்துவமனையில் மட்டும் தான், சிறப்பு தீவிர சிகிச்சை மற்றும் மயக்கவியல் நிபுணர்களின் கண்காணிப்பில், 24 மணி நேர தீவிர விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. விவரங்களுக்கு, 98422-09999, 98422 11116 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.