உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  புதிதாக வந்த ஆம்புலன்ஸ் 

 புதிதாக வந்த ஆம்புலன்ஸ் 

திருப்பூர்: மாநிலம் முழுதும், 87 புதிய, 108 ஆம்புலன்ஸ் துவக்க விழா சென்னையில் நடந்தது. 19 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ்கள் இயக்கத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து, துவக்கி வைத்தார். புதிய ஆம்புலன்ஸ்களில் ஒன்று, திருப்பூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தாராபுரம் - காங்கயம் சாலையில், குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குள்ளம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்குள்ள மாவட்ட மருந்து கிடங்கில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு மருந்துகள் அனுப்பி வைக்கப்படுகிறது. குள்ளம்பாளையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்க்கு மாற்றாக, புதிய 108 ஆம்புலன்ஸ் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், ஒரு பைக் ஆம்புலன்ஸ் உட்பட, முப்பத்திநான்கு 108, ஆம்புலன்ஸ்கள் இயக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்