உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 13 ஆயிரம் மரங்கள் வளர ஒரு காகம் காரணம்

13 ஆயிரம் மரங்கள் வளர ஒரு காகம் காரணம்

பல்லடம்;பல்லடம் வனாலயத்தில், வான் மழை மாதாந்திர கருத்தரங்கம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, அதன் தலைவர் சுவாதி கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ் வரவேற்றார். செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.'மண்ணும் மரமும்' இயக்கத்தின் அமைப்பாளர் ராஜூ பேசியதாவது:பல்லுயிர் பெருக்கத்தில் பனைமரம் முதல் இடத்தில் உள்ளது. பனை பொருட்களின் பயன்பாடு குறைந்ததால் சர்க்கரை வியாதி அதிகரித்துள்ளது. மண்ணில்லாமல் மரமில்லை; மரமில்லாமல் மண்ணில்லை. இவை இரண்டும் இல்லாமல் மனிதகுலம் இல்லை.இயற்கை வளத்துக்கு வெளிநாடுகளில் சிறப்பான பங்களிப்பு தருகின்றனர். நீர்நிலைகளில் ஒரு நெகிழி பைகளைக்கூட பார்க்க முடியாது. இங்கு, நீர்நிலைகளை சாக்கடையாக்கி விடுகின்றனர். இளம் தலைமுறையினர் மரங்கள் அவசியம் குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டு மரங்களுக்குதான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். ஒரு காகம் தன் வாழ்நாளில், 13 ஆயிரம் மரக்கன்றுகள் வளர காரணமாகின்றது.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, பொள்ளாச்சி ஜேசீஸ் நிறுவனர் கோபாலகிருஷ்ணன், தேனீக்கள் ஆராய்ச்சியாளர் விவேகானந்தன் ஆகியோர் பேசினர். வனம் அமைப்பின் இயக்குனர் அனந்தகிருஷ்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி