உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழாயில் காற்று தான் வருது குடிநீருக்கு கிராமங்கள் தவம்

குழாயில் காற்று தான் வருது குடிநீருக்கு கிராமங்கள் தவம்

திருப்பூர்;நான்காவது கூட்டுக்குடிநீர் திட்டத்தில், பத்து ஊராட்சிகளுக்கு விரைந்து குடிநீர் வழங்கவேண்டும் என, மா.கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.திருப்பூரில், நான்காவது கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த, 11ம் தேதி திருப்பூருக்கு வந்த அமைச்சர் உதயநிதி, குடிநீர் திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். இத்திட்டத்தில், திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 10 ஊராட்சிகளில், மக்களுக்கு இன்னும் குடிநீர் வழங்கப்படவில்லை.மா.கம்யூ., பொங்குபாளையம் கிளை செயலாளர் அப்புசாமி, கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:திருப்பூரில் நான்காவது கூட்டுக்குடிநீர் திட்டத்தை அமைச்சர் உதயநிதி துவக்கிவைத்தார். ஆனால், இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ள பொங்குபாளையம், வள்ளிபுரம், தொரவலுார், மேற்குப்பதி, சொக்கனுார், பட்டம்பாளையம் உட்பட பத்து ஊராட்சி களுக்கு இன்னும் குடிநீர் வழங்கப்படவில்லை.இரண்டு மற்றும் மூன்றாவது திட்டத்தில், 20 நாட்களுக்கு ஒருமுறை கூட குடிநீர் வழங்கப்படாததால், மேற்கண்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு நீடித்துவருகிறது. நிலத்தடி நீர் மாசு அடைந்துள்ளது; கிணறுகளில் தண்ணீரின் உப்புத்தன்மை அதிகரித்துவிட்டது. நான்காவது கூட்டுக்குடிநீர் திட்டத்தில், பொங்குபாளையம் உட்பட பத்து ஊராட்சிகளுக்கு விரைந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை