உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொங்கல் சிறப்பு பஸ் இயக்கம் ;முன்பதிவு மையம் திறப்பு

பொங்கல் சிறப்பு பஸ் இயக்கம் ;முன்பதிவு மையம் திறப்பு

உடுமலை:வரும், 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பூர் மண்டலத்தில் சிறப்பு பஸ் இயக்கம் இன்று துவங்குகிறது; 14ம் தேதி நள்ளிரவு வரை பஸ் இயக்கப்படுகிறது.திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேலம், திருவண்ணாமலைக்கு, 130, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணத்துக்கு, 200, கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, தேனி, கம்பம், சிவகங்கை, சிவகாசி உள்ளிட்ட பகுதிக்கு, 300 நடைகள் என மொத்தம், மூன்று பஸ் ஸ்டாண்ட்டுக்கும் சேர்த்து, 630 கூடுதல் நடை பஸ்கள் இயக்கப்பட உள்ளது.சென்னை, திருச்செந்துார், நாகர்கோவில், செங்கோட்டை உள்ளிட்ட தொலைதுாரங்களுக்கு பயணிக்க, முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்ய, மத்திய பஸ் ஸ்டாண்ட்டில் முன்பதிவு மையம் திறக்கப்பட்டுள்ளது.காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை இம்மையத்தில் முன்பதிவு டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி