உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மத்திய பஸ் ஸ்டாண்டில் முன்பதிவு மையம் திறப்பு 

மத்திய பஸ் ஸ்டாண்டில் முன்பதிவு மையம் திறப்பு 

திருப்பூர் : வெளியூர் செல்லும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய, மத்திய பஸ் ஸ்டாண்டில் டிக்கெட் முன்பதிவு மையம் திறக்கப்பட்டுள்ளது.பஸ் ஸ்டாண்ட் விரிவுபடுத்தும் பணி துவங்கும் முன், முந்தைய பழைய பஸ் ஸ்டாண்டில், டிக்கெட் முன்பதிவு மையம் செயல்பட்டது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் மத்திய பஸ் ஸ்டாண்ட் புதியதாக அமைந்த போது, நிர்வாக காரணங்களுக்காக இம்மையம் புதிய பஸ் ஸ்டாண்ட்டுக்கு இடமாற்றப்பட்டது.தற்போது, அங்கு திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் மார்க்கமாக செல்லும் தொலைதுார பஸ்கள் மட்டுமே செல்கிறது. சென்னை, நாகர்கோவில், மார்த்தண்டம் உட்பட, 400 கி.மீ., க்கு அதிகமாக செல்லும் பஸ்கள், மத்திய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்வதால், டிக்கெட் முன்பதிவு மையம் மத்திய பஸ் ஸ்டாண்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:டிக்கெட் முன்பதிவு மையம் காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை செயல்படும். அரசு போக்குவரத்து கழகம் இயக்கும் திருச்செந்துார், திருவண்ணாமலை, மைசூர், வேளாங்கன்னி, நாகர்கோவில், ராமேஸ்வரம், கும்பகோணம், கடலுார், செங்கோட்டை, காரைக்குடி, சங்கரன் கோவில், சிவகாசி, பட்டுக்கோட்டை, பரமக்குடி, ராஜபாளையம், மன்னார்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இது தவிர, திருப்பூரில் இருந்து நாகர்கோவில், மார்த்தாண்டத்துக்கு இயக்கப்படும் ஏ.சி., பஸ், சென்னைக்கு இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட ஏ.சி., பஸ்சுக்கு இங்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். மேலும் விபரங்களுக்கு, 97500 40448 என்ற எண்ணில் அழைக்கலாம். தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களுக்கான முன்பதிவு மட்டும் இயங்கும். பஸ்கள் கோவில்வழியில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ