மேலும் செய்திகள்
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
10-Dec-2024
பொங்கலுார்; பொங்கலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிய செவிலியர் குடியிருப்பு, 33 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. அதை நேற்று முன்தினம் துணை முதல்வர் உதயநிதி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பொங்கலுார் ஒன்றிய குழு தலைவர் குமார், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்ரமணியம், வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல், பொறுப்பு மருத்துவ அலுவலர் சாம்பால், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
10-Dec-2024