உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி; சுகாதாரப்பணிகள் துவக்கம்

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி; சுகாதாரப்பணிகள் துவக்கம்

உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில், முழு துாய்மைப்பணிகள் நேற்று முதல் துவங்கியது.எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற கருத்தை மையமாகக்கொண்டு, அரசு பள்ளிகளில் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு, முழுமையான துாய்மைப்பணிகளை மேற்கொள்ள, மாநில அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, இம்மாதம் நடந்த பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகத்தினர், துாய்மைப்பணியாளர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் ஒருங்கிணைந்து இப்பணிகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன்படி உடுமலை சுற்றுப்பகுதி அரசுப்பள்ளிகளில், முழு துாய்மைப்பணிகள் முகாம் நேற்று துவங்கியது.பள்ளி வகுப்பறை, தலைமையாசிரியர் அறை, வளாகம், முன்புறம் உள்ள அனைத்து பகுதிகளிலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.வளாகத்தில் மழைநீர் தேங்காத வகையில், மேடு பள்ளங்களை சமன் செய்வது, கழிவுகளை தரம் பிரித்து, உரம் தயாரிப்பதற்கு உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.குப்பைக்கழிவுகளை மேலாண்மை முறையில் மட்டுமே அப்புறபடுத்த வேண்டும், எரிக்கக் கூடாதெனவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதவிர, காய்கறித்தோட்டம் இல்லாத பள்ளிகளில், தோட்டம் அமைப்பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்வதற்கு, இம்மாதம் இறுதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.மூன்று நாட்களுக்கும், ஒவ்வொரு கட்டமாக பிரித்து, துாய்மைப்பணிகளை பள்ளிகளில் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை