உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பெரிய தொகுதியாக பல்லடம் நீடிப்பு சிறிய தொகுதியானது திருப்பூர் தெற்கு

 பெரிய தொகுதியாக பல்லடம் நீடிப்பு சிறிய தொகுதியானது திருப்பூர் தெற்கு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி, உடுமலை, தாராபுரம், மடத்துக்குளம், காங்கயம் என, 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த பகுதியாக பல்லடம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட சட்டசபை தொகுதிகள் உள்ளன.  வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணிக்கு முன், 4.19 லட்சம் வாக்காளர்களுடன், பல்லடம் தொகுதி, திருப்பூர் மாவட்டத்தின் பெரிய சட்டசபை தொகுதியாக இருந்தது. எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணிக்கு பின், கிட்டத்தட்ட, 1.12 லட்சம் வாக்காளர்கள் குறைந்திருந்தும், 3.06 லட்சம் வாக்காளர்களுடன், மாவட்டத்தின் பெரிய சட்டசபை தொகுதியாகவே இருக்கிறது.  இரண்டாவது பெரிய சட்டசபை தொகுதியாக, 4.07 லட்சம் வாக்காளர்களுடன் இருந்த திருப்பூர் வடக்கில், 1.11 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டும், 2.96 லட்சம் வாக்காளர்களுடன் அதே இரண்டாவது பெரிய தொகுதியாக இருக்கிறது.  மூன்றாவது பெரிய தொகுதியாக, 2.96 லட்சம் வாக்காளர்களுடன் அவிநாசி இருந்தது; தற்போது, வாக்காளர் எண்ணிக்கை, 2.40 லட்சமாக குறைந்திருப்பினும், மூன்றாவது பெரிய தொகுதியாகவே இருக்கிறது.  நான்காவது பெரிய தொகுதியாக, 2,72,295 வாக்காளர்களுடன் இருந்த திருப்பூர் தெற்கில், 87 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், தற்போது, 1.85 லட்சம் வாக்காளர்களுடன், 8வது இடத்துக்கு தள்ளப்பட்டு, மாவட்டத்தின் சிறிய சட்டசபை தொகுதியாக மாறியிருக்கிறது.  ஐந்தாவது பெரிய தொகுதியாக, 2,72,017 வாக்காளர்களுடன் இருந்த உடுமலை, தற்போது, 2.20 லட்சம் வாக்காளர்களுடன், 4வது பெரிய தொகுதியாக மாறியிருக்கிறது.  ஆறாவது பெரிய தொகுதியாக, 2.67 லட்சம் வாக்காளர்களுடன், காங்கயம், 2.10 லட்சம் வாக்காளர்களுடன் அதே இடத்தை தக்க வைத்துள்ளது.  ஏழாவது பெரிய தொகுதியாக, 2.66 லட்சம் வாக்காளர்களுடன் இருந்த தாராபுரம், 2.15 வாக்காளர்களுடன், 5வது பெரிய தொகுதியாக முன்னேறியிருக்கிறது.  இதில், 2.43 லட்சம் வாக்காளர்களுடன் மாவட்டத்தின் சிறிய தொகுதியாக, 8வது இடத்தில் இருந்து, மடத்துக்குளம், 2.06 லட்சம் வாக்காளர்களுடன், 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை