உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாநில நெடுஞ்சாலையில் ஊராட்சி குப்பை கிடங்கு

 மாநில நெடுஞ்சாலையில் ஊராட்சி குப்பை கிடங்கு

உடுமலை: மடத்துக்குளம் அருகே, மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள குப்பை கிடங்கால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. மடத்துக்குளம் ஒன்றியம், காரத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், உடுமலை - - தாராபுரம் ரோட்டில், ரோட்டோரத்தில் ஊராட்சி நிர்வாகம் குப்பையை கொட்டி தேக்கி வைத்துள்ளது. இதன் அருகிலேயே பிரசித்தி பெற்ற கோவில், அமராவதி பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் உள்ள நிலையில், கழிவுகள் ரோட்டில் சிதறியும், குப்பைக்கு தீ வைத்து எரிப்பதாலும், சுகாதார கேடும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், சேகரிக்கும் கழிவுகளை உரமாக மாற்றாமல், விதி மீறி தேக்கி வைக்கப்படுகிறது. எனவே, காரத்தொழுவு ஊராட்சியில், மாநில நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கை அகற்றவும், திடக்கழிவு மேலாண்மையை முறையாக செயல்படுத்தவும் வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை