உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பார்க்கிங் இடமான பயணியர் நிழற்குடை

 பார்க்கிங் இடமான பயணியர் நிழற்குடை

திருப்பூர்: கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிக்கப்பட்டு வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சி சார்பில் மாநகரின் மூன்றாவது பஸ் ஸ்டாண்டாக கோவில்வழியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. தாராபுரம் ரோடு வழியாகச் செல்லும் பஸ்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. இரண்டு ஆண்டாக கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்ட இந்த பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை இரண்டு மாதங்கள் முன் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பஸ்கள் நிறுத்துமிடம், வணிக வளாகம், இரு சக்கர வாகன பார்க்கிங், கழிப்பறைகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து பிளாட்பாரங்களிலும் பயணிகள் காத்திருக்கும் வகையில் வசதியாக நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பிரதான பிளாட்பாரத்தில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையை வாகன நிறுத்துமிடமாக மாற்றி விட்டனர். வாகன பார்க்கிங் வளாகத்தை டெண்டர் எடுத்தவர், இந்த நிழற்குடையை வாகன நிறுத்துமிடமாக மாற்றிவிட்டார். அங்கு பார்க்கிங் செய்யும் வாகனங்களுக்கு டோக்கன் போட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயணிகள் பயன்படுத்தும் இடத்தை வாகன பார்க்கிங்காக மாற்றிப் பயன்படுத்துவதால், பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள், இந்த அத்துமீறலை எவ்வாறு அனுமதித்தனர் என்றே தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை