உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று வரி செலுத்தலாம்...

இன்று வரி செலுத்தலாம்...

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில், பொதுமக்கள் வசதிக்காக வரிவசூல் மையங்கள் இன்று செயல்படும் என்று கமிஷனர் பவன்குமார் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் அறிக்கை:திருப்பூர் மாநகராட்சி, மண்டலங்களில் சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்ட குத்தகை இனங்கள் ஆகியவை மக்களின் வசதிக்காக அங்குள்ள வரி வசூல் மையங்களில் வசூலிக்கப்படுகிறது. இன்று மையங்கள் வழக்கம் போல் செயல்படும்.பிப்., 2024 வரையிலான அனைத்து சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை மைய அலுவலக கணினி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகம், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, முத்தணம்பாளையம், வீரபாண்டி உள்ளிட்ட இடங்கள். காசோலை மூலமாகவோ, இணையதளம் வழியாகவும் செலுத்தும் வசதியும் உள்ளது.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை