உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுங்கச்சாவடி அகற்ற வேண்டும்; மத்திய அமைச்சரிடம் மனு

சுங்கச்சாவடி அகற்ற வேண்டும்; மத்திய அமைச்சரிடம் மனு

பொங்கலுார்;வேலம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மத்திய இணை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி, உ.உ., கட்சித் தலைவர் செல்லமுத்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் சண்முகசுந்தரம், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம் ஆகியோர், மத்திய இணை அமைச்சர் முருகனிடம் அளித்த மனு:வேலம்பட்டி சுங்கச்சாவடி நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டும் அகற்றவில்லை. என்.எச்., 381 சாலை சட்ட விதிகளின்படி அமையவில்லை. அடிப்படை வசதிகள் இன்றி உள்ளது.சாலையின் துாரம் 31.8 கிலோ மீட்டர். சுங்கச்சாவடி அமைக்க, 60 கி.மீ., இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் இருந்து, 4.5 கிலோ மீட்டரில் திருப்பூர் மாநகராட்சி எல்லை வருகிறது. மாநகராட்சியில் இருந்து, 10 கி.மீ., தாண்டி சுங்கச்சாவடி அமைக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.நான்கு வழிச்சாலைக்கு உண்டான அடிப்படை வசதிகள் செய்யாமல் சட்ட விதிகளை பின்பற்றாமல் சுங்கச் சாவடி அமைத்து வசூல் செய்யும் முயற்சியை கைவிட தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும், மத்திய அரசுக்கும் பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை