உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.எப்., குறைதீர் கூட்டம்; தொழிலாளருக்கு பயன்

பி.எப்., குறைதீர் கூட்டம்; தொழிலாளருக்கு பயன்

பல்லடம்;பல்லடம் அருகே நடந்த பி.எப்., சந்தாதாரர் குறை தீர்ப்பு கூட்டத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலர் பங்கேற்று பயனடைந்தனர்.கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீடுக் கழகம் இணைந்து, பி.எப்., சந்தாதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும், 'நிதி ஆப்கே நிகட்' என்ற குறைதீர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றன.இதன்படி, தொழிலாளர் குறை தீர்ப்பு கூட்டம் பல்லடம் அருகே, பனப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் நேற்று நடந்தது. பி.எப்., அலுவலக மண்டல செயல் அலுவலர் மனோகரன் தலைமை வகித்தார். உதவி செயல் அலுவலர்கள் கிரிஷ், யோகேஷ் முன்னிலை வகித்தனர்.நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள பி.எப்., சந்தாதாரர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டி இம்முகாம் நடத்தப்பட்டது. தனியார் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மூலம் தொழிலாளர்களின் குறைகள் பட்டியலிடப்பட்டு, தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.காலை 10:30க்கு முகாம் துவங்கி மதியம் 3.00 மணி வரை நடந்தது. சில விண்ணப்பங்களுக்கு ஆன்லைனில் அங்கேயே தீர்வு காணப்பட்ட நிலையில், தீர்வு காண முடியாத விண்ணப்பங்கள் நடவடிக்கைக்கு ஏற்கப்பட்டன.முகாமில், நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று பயனடைந்தனர். பி.எப்., அலுவலகம் சார்பில் திருப்பூர், பல்லடம் கிளை மேலாளர்கள் இந்திரலேகா, பூபதி கிருஷ்ணசாமி மற்றும் அரிந்தம் ராய் உட்படபலர் பங்கேற்றனர்.அறிவிப்பின்றி முகாம்!தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பி.எப்., சந்தாதாரர்களுக்கு அந்நிறுவனம் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிறுவனங்களில் இருந்து வெளியேறிய தொழிலாளர்களுக்கு இது குறித்த தகவல் சென்று சேர்ந்ததா? என்பது கேள்விக்குறியே. திட்டமிட்டு, முன்கூட்டியே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தால், தொழிலாளர்கள் பலரும் இதில் பங்கேற்று பயனடைந்திருப்பர். வரும் நாட்களில், இதுகுறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன்பின், நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை