| ADDED : ஜன 26, 2024 01:17 AM
திருப்பூர்;'தாட்கோ' திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர், பிசியோதெரபி கிளினிக் அமைக்க, மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது.சொந்த கட்டடம் வைத்திருப்போர் மற்றும் இடம் இல்லாதோர் வாடகைக்கு இடம் தேர்வு செய்து, பிசியோதெரபி கிளினிக் அமைக்கலாம்.கிளினிக் அமைக்கும் தொழில்முனைவோர் மற்றும் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சி, தொழில் துவங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து, இலவச ஆலோசனைகள், தனியார் நிறுவனம் மூலம் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.பிசியோதெரபிஸ்ட் பயிற்சியில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தோர் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்து, 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், 'தாட்கோ' மானியத்துடன் கூடிய கடன் பெறலாம்.தகுதியுள்ளோர், போட்டோ மற்றும் உரிய சான்றிதழ்களுடன், www.tahdco.comஎன்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விவரங்களுக்கு, 'தாட்கோ' மாவட்ட மேலாளர் அலுவலகத்தை 94450 29552 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.