உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  புளியவலசில் 800 மகோகனி மரக்கன்றுகள் நடவு

 புளியவலசில் 800 மகோகனி மரக்கன்றுகள் நடவு

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், மூலனுார் அடுத்துள்ள புளியவலசு கிராமத்தில், 800 மகோகனி மரக்கன்றுகள் நடப்பட்டன. 'வெற்றி' அறக்கட்டளையின், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் என்பது, பல்வேறு இளம் பசுமை அமைப்பினர், வனத்துறை, பசுமை ஆர்வலர்கள் கூட்டாக இயக்கும் மாபெரும் பசுமை இயக்கம். இத்திட்டத்தில், கடந்த, 2015ம் ஆண்டு துவங்கி, தற்போது வரை, 24 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகின்றன. நடப்பு ஆண்டில் திட்டமிடப்பட்டபடி, மூன்று லட்சம் மரக்கன்று நடப்பட்டு வருகிறது; இதுவரை, 2.40 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், வெள்ள கோவில், மூலனுார் அடுத்துள்ள புளியவலசு கிராமத்தில், சிவசுப்பிரமணியம் என்பவரின் தோட்டத்தில், 800 மகோகனி மரக்கன்றுகள் நடப்பட்டன. 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை