உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிளாட்டோஸ் - டீ பப்ளிக் அணி கோப்பை வெல்லப் போவது யாரு? மாவட்ட கிரிக்கெட்; இன்று பைனல்

பிளாட்டோஸ் - டீ பப்ளிக் அணி கோப்பை வெல்லப் போவது யாரு? மாவட்ட கிரிக்கெட்; இன்று பைனல்

திருப்பூர்;திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், பள்ளி அணிகளுக்கு இடையேயான மாவட்ட கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது; இன்று இறுதி போட்டி நடக்கிறது.பள்ளி அளவில் சிறந்த கிரிக்கெட் அணிகளை தேர்வு செய்ய, மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், மாவட்ட கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. 'ஏ' பிரிவில் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, டீ பப்ளிக் மெட்ரிக், ஆதர்ஸ் வித்யாலயா, அகரம் பப்ளிக், பிளாட்டோஸ் அகாடமி அணிகளும், 'பி' பிரிவில் எம்.என்., சிக்கண்ணா செட்டியார் மெட்ரிக், தி ஏர்னெஸ்ட் அகாடமி, பாரதி கிட்ஸ் சேத்ராலயா, சிவநிகேதன் ஸ்கூல், எஸ்.கே.எல்., பப்ளிக், சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி அணிகள் இடம் பெற்றது.கடந்த டிச., 25ம் தேதி முதல், ஒவ்வொரு பிரிவில் உள்ள அணிகளுக்கு இடையே லீக் போட்டிகள் நடந்தது. 22 லீக் போட்டிகள் முடிந்த பின், ஜன., 2 மற்றும், 3ம் தேதி நான்கு காலிறுதி போட்டிகள் நடந்தது. நேற்று, அரையிறுதி போட்டி நடந்தது.முதல் அரையிறுதியில், பிளாட்டோஸ் அகாடமி - நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அணியும் மோதியது. முதலில், பேட்டிங் செய்த, 18.5 ஓவரில் 57 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. எளிய இலக்கை விரட்டிய பிளாட்டோஸ் பள்ளி அணி, 6.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்து வெற்றி பெற்றது.இரண்டாவது அரையிறுதி போட்டியில் முதலில் பேட் செய்த டீ பப்ளிக் பள்ளி அணி, 24 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 138 ரன் குவித்தது. பேட்ஸ்மேன் சஸ்வத் சதம் (101) கடந்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடின இலக்கை விரட்டிய ஆதர்ஷ் பள்ளி அணி, 25 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்தது.இன்று நடக்கும் இறுதி போட்டியில், பிளாட்டோஸ் பள்ளி அணியும், டீ பப்ளிக் பள்ளி அணியும் மோதுகிறது. வெற்றி பெறும் அணிக்கு, கோப்பை வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ