உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விளக்கு இல்லா கம்பம்; பயணி இல்லா நிழற்குடை  

விளக்கு இல்லா கம்பம்; பயணி இல்லா நிழற்குடை  

வாகன இடையூறுஓலப்பாளையத்தில் இருந்து உத்தமபாளையம் செல்லும் வழியில் முருக்காட்டுவலசு பகுதியில் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. வாகனங்களை முறைப்படுத்த வேண்டும்.- வேலுச்சாமி, உத்தமபாளையம். (படம் உண்டு)கழன்ற விளக்குதிருப்பூர், ஜி.என்., கார்டனில் மின்கம்பத்தில் தெருவிளக்கு கழன்று தொங்கிய நிலையில் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் சரிசெய்து தர வேண்டும்.- குமார், பெருமாநல்லுார். (படம் உண்டு)கற்களுடன் சாலைதிருப்பூர், தென்னம்பாளையம் ஆர்.வி.இ., லே-அவுட்டில் ரோட்டில் கற்கள் நிறைந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.- கோகுல், ஆர்.வி.இ., லே-அவுட். (படம் உண்டு)பல்லாங்குழி சாலைதிருப்பூர், நெருப்பெரிச்சல், ஜி.என்., கார்டன் பத்திரப்பதிவு துறை அலுவலகம் முன் சாலை குழியாக உள்ளது. ரோடு போட வேண்டும்.- கவிப்பிரியன், நெருப்பெரிச்சல். (படம் உண்டு)சோளிபாளையம், நவரத்னா அபார்ட்மென்ட் முன், ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர்.- செந்தில், சோளிபாளையம்.குடிநீர் தாமதம்திருப்பூர், 60வது வார்டு, அமராவதிபாளையம், முத்தீஸ்வர் நகர் பகுதிக்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தண்ணீரின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.- சோனல், அமராவதிபாளையம்.பயன்படாத நிழற்குடைதிருப்பூர், மாநகராட்சி அலுவலகம் முன், மங்கலம் ரோட்டில் உள்ள நிழற்குடை பயன்பாடு இல்லாமல் உள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பஸ் ஸ்டாப், நிழற்குடையை பயன்படுத்த முன்வரலாம்.- வின்சென்ட், ராயபுரம். (படம் உண்டு)பொருத்தாத விளக்குதிருப்பூர், இடுவம்பாளையம், கார்த்திக் நகர் 4வது வீதி, ஜே.கே., அவென்யூ முதல் வீதியில் புதிய மின்கம்பங்கள் மட்டும் நடப்பட்டுள்ளது. தெருவிளக்கை இன்னமும் பொருத்தவில்லை.- கேசவன், இடுவம்பாளையம். (படம் உண்டு)துர்நாற்றம் வீசுதுதிருப்பூர், பி.என்., ரோடு, சிவன் தியேட்டர் - நெசவாளர் காலனி வழியில் அடிக்கடி கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் துர்நாற்றத்துடன் வழிந்தோடுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- பிரகாஷ், நெசவாளர் காலனி. (படம் உண்டு)அகலாத கழிவுகள்திருப்பூர், ராயபுரம், சூசையாபுரம் எக்ஸ்டன்சன் பகுதியில் கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது. அதிலிருந்து அள்ளி கழிவுகளை அகற்றாமல், வீடுகள் முன் அப்படியே விட்டுள்ளனர்.- ரோஹித், சூசையாபுரம். (படம் உண்டு)ரியாக் ஷன்சாலை அமைப்புதெக்கலுார், சென்னிமலைபாளையம், நஞ்சப்பா கவுண்டர் காடு பகுதியில் ஜல்லிக்கொட்டி ரோடு போடாமல் அப்படியே விடப்பட்டது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது, தார் ரோடு போட்டுள்ளனர்.- கோபால், சென்னிமலைபாளையம். (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ