| ADDED : ஜன 31, 2024 12:38 AM
வீட்டில், நகை - பணம் திருட்டு: பொங்கலுார் அருகே கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து, 42; பனியன் கம்பெனி தொழிலாளி. அவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வந்து பார்த்தபோது வீட்டில் வைத்து இருந்த ஒன்றரை சவரன் நகை, பணம், 20 ஆயிரம் ரூபாயை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.லாரி மோதி தொழிலாளி பலி: காங்கயம், தாமரைகாட்டுவலசுவை சேர்ந்தவர் சுப்ரமணியன், 77; விவசாய தொழிலாளி. நேற்று முன்தினம் சென்னிமலை ரோடு சாவடி அருகே ரோட்டோரம் நின்று கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த லாரி சுப்ரமணியன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.ரயில் மோதி மூதாட்டி பலி: ஊத்துக்குளி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற, 70 வயது மூதாட்டி மீது ரயில் மோதியதில், பரிதாபமாக இறந்தார். ரயில்வே ஸ்டேஷன் அருகே வீடுகள் அதிகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த மாராத்தாள், 70 நேற்று மதியம் ரயில் தண்டவாளத்தை ஒரு புறம் இருந்து மறுபுறம் கடக்க முயன்றார். எதிர்பாராத விதமாக ரயிலில் அடிபட்டு இறந்தார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.