உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல்ஊத்துக்குளி, பூசாரிபாளையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த சிலர், தங்கள் பகுதியில் இருந்து கஞ்சா சாக்லெட்டை ரயில் மூலம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று பூசாரிபாளையத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சந்தேகப்படும் விதமான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அங்கு தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒடிசாவை சேர்ந்த சாகதிப் மாலிக், 35 என்பவர், ஊரில் இருந்து கடத்தி வந்து கஞ்சா சாக்ெலட் விற்பனை செய்தது தெரிந்தது. அவரது அறையில் சோதனை செய்த போது, 2 கிலோ மதிப்புள்ள, பத்து பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்து, கைது செய்தனர்.கணவன் கண் முன் மனைவி பலிபெருந்தொழுவை சேர்ந்தவர் மாரியப்பன், 55. இவரது மனைவி அங்காயி, 54. நேற்று முன்தினம் தாராபுரம் - திருப்பூர் ரோட்டில் டூவீலரில் தம்பதி சென்று கொண்டிருந்தனர். கோணபுரம் பிரிவு அருகே சென்ற போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, டூவீலரை முந்தி சென்ற போது, லாரியின் பக்கவாட்டில் இருந்த இரும்பு ஆங்கிள், அங்காயி மீது மோதியது. தம்பதி டூவீலருடன் கீழே விழுந்தனர். லாரியின் சக்கரத்தில் சிக்கி அங்காயி பரிதாபமாக இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.கல்லுாரி மாணவர் தற்கொலைதிருப்பூர், மங்கலம், காளிபாளையத்தை சேர்ந்தவர் ராகுல், 20; கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, இரு ஆண்டுக்கு முன், தாய் இறந்த சோகத்தில் மனமுடைந்து இருந்து வந்தார். நேற்று காலை தறி குடோனில் ராகுல் துாக்குமாட்டி இறந்தார். சடலத்தை கைப்பற்றி மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை