| ADDED : நவ 22, 2025 07:54 AM
திருப்பூர்: திருப்பூரில் நகை கண்காட்சி பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரரின் ஏ.கே.47 ரக துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. ஈரோட்டைச் சேர்ந்த நகை விற்பனை நிறுவனம், திருப்பூரில் நகை விற்பனை கண்காட்சி ஏற்பாடு செய்துள்ளது. மங்கலம் ரோடு பாரப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் இக்கண்காட்சி நடக்கிறது. இதற்காக, பாதுகாப்பு பணியில் திருப்பூர் மாநகர ஆயுதப்படை போலீசார் இருவர் ஈடுபட்டிருந்தனர். அதில், பாலகுமார் என்ற போலீஸ்காரர், கழிப்பறை செல்வதற்காக ஏ.கே.47 ரக துப்பாக்கியை இடம் மாற்றி வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, சேப்டி லாக்கர் திறந்து கொண்டு துப்பாக்கியிலிருந்து குண்டுகள் சீறிப்பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இருப்பினும் திடீரென துப்பாக்கி வெடித்ததால், சற்று பரபரப்பு நிலவியது. இது குறித்து, திருப்பூர் சென்ட்ரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.