உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  துப்பாக்கியில் சீறிய குண்டு போலீசிடம் விசாரணை

 துப்பாக்கியில் சீறிய குண்டு போலீசிடம் விசாரணை

திருப்பூர்: ஈரோட்டைச் சேர்ந்த நகை விற்பனை நிறுவனம் சார்பில், திருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையத்தில் உள்ள ஒரு வளாகத்தில் நகை விற்பனை கண்காட்சி நடந்தது. நேற்று முன்தினம், இதற்காக பாதுகாப்பு பணியில் திருப்பூர் மாநகர ஆயுதப்படை போலீசார் இருவர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலீஸ்காரர் பாலகுமார் கழிப்பறை செல்வதற்காக ஏ.கே. 47 ரக துப்பாக்கியை இடம் மாற்றி வைத்தார். எதிர்பாராதவிதமாக 'சேப்டி லாக்' திறந்து, துப்பாக்கியிலிருந்து குண்டு சீறிப்பாய்ந்தது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. பணியின் போது அலட்சியமாக நடந்து கொண்டதற்காக சம்பந்தப்பட்ட ஆயுதப்படை போலீஸ்காரருக்கு 'சார்ஜ்' வழங்கப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க விசாரணை நடக்கிறது. தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஆயுதபடை போலீஸ்காரருக்கு, உயர் ரக துப்பாக்கியை அனுமதித்த உதவி கமிஷனர் மற்றும் ஆயுதப்படை இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை