உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நிலுவையில் புகார் மனுக்கள்; போலீஸ் அதிகாரிகள் விசாரணை

 நிலுவையில் புகார் மனுக்கள்; போலீஸ் அதிகாரிகள் விசாரணை

திருப்பூர்: முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்ட புகார் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் நடந்த குறைகேட்பு முகாமில் மனுக்களை போலீஸ் உதவி கமிஷனர்கள் விசாரித்தனர். திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குற்றங்களை குறைக்கவும், தடுக்கவும் பல்வேறு நடவடிக்கையை கமிஷனர் ராஜேந்திரன் மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் தரப்பில், கமிஷனர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மனுக்களை அளிக்கின்றனர். இது சம்பந்தப்பட்ட சரகம், ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது. அதில், பல மனுக்கள் மீது நடவடிக்கை இல்லாமல் நிலுவையில் உள்ளது. இம்மனுக்கள் தொடர்பாக, இரு தரப்பையும் அழைத்து குறைகேட்பு முகாம் மூலம் விசாரித்து தீர்வு ஏற்படுத்த கமிஷனர் அறிவுறுத்தியிருந்தார். திருப்பூர் மாநகரில் உள்ள திருமுருகன்பூண்டி, கொங்கு நகர், கே.வி.ஆர்., நகர், நல்லுார் ஆகிய சரகங்களுக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் தொடர்பாக, அந்தந்த உதவி கமிஷனர்கள் மக்களிடம் விசாரிக்கும் வகையில் மக்கள் குறைகேட்பு முகாமுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பங்கேற்ற மக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வும், சிலவற்றுக்கு விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை