உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நொய்யல் கரையில் பொங்கல் விழா: தூய்மை பணி - ஏற்பாடுகள் தீவிரம்

நொய்யல் கரையில் பொங்கல் விழா: தூய்மை பணி - ஏற்பாடுகள் தீவிரம்

திருப்பூர்;திருப்பூரில் பொங்கல் திருவிழா நடைபெறும் பகுதியில் ரோடு சீரமைப்பு மற்றும் துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.திருப்பூர் மாநகராட்சி சார்பில், நொய்யல் பண்பாட்டு கழகத்துடன் இணைந்து 15, 16 ஆகிய தேதிகளிலும், ஜீவநதி நொய்யல் சங்கத்துடன் இணைந்து 17ம் தேதியும் மூன்று நாள் பொங்கல் விழா, நொய்யல் ஆற்றின் கரையோரம் நடக்கவுள்ளது.வளர்மதி பாலம் முதல் யுனிவர்சல் தியேட்டர் ரோடு வழியாகவும், கஜலட்சுமி தியேட்டர் ரோடு வழியாகவும், ஈஸ்வரன் கோவில் பாலம் வரை உள்ள ரோட்டில், நொய்யலின் இரு கரையிலும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.இந்த இரு ரோடுகளிலும், யுனிவர்சல் தியேட்டர் ரோடு பகுதியிலும், குண்டும்குழியுமாக உள்ள ரோடு, பேட்ச் ஒர்க் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து ரவுண்டானாக்கள் துாய்மைப்படுத்தும் பணியும் நடக்கிறது.நொய்யல் கரையை ஒட்டி, விழா மேடை அமையவுள்ள இடத்தில், ரோட்டின் ஓரப் பகுதி முழுவதும் சிதிலமடைந்துள்ளது. இதனால், அப்பகுதியில் தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை, மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ