உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கலைநிகழ்ச்சிகளால் களைகட்டிய பொங்கல் விழா

 கலைநிகழ்ச்சிகளால் களைகட்டிய பொங்கல் விழா

திருப்பூர்: திருப்பூரில் மூன்று நாள் நடந்த, கொங்கு பன்னாட்டு வர்த்தகம் மற்றும் கலாசார நிறுவனத்தின் (கிட்கோ) முப்பெரும் விழா, நேற்று பொங்கல் விழாவுடன் நிறைவடைந்தது. 'கிட்கோ', கொங்கு வர்த்தக கூட்டமைப்பு(கே.வி.கே.) ஆகியன சார்பில் முப்பெரும் விழா, திருப்பூர், தாராபுரம் ரோடு, ஸ்ரீவேலாயுதசாமி மண்டபத்தில், கடந்த 26ம் தேதி திருப்பூரில் துவங்கியது. கொங்கு நாடு வர்த்தக பொருட்காட்சி, 'கிட்கோ' நான்காம் ஆண்டு துவக்க விழா, கொங்கு வர்த்தக கூட்டமைப்பின் மூன்றாமாண்டு பொங்கல் விழா ஆகிய முப்பெரும் விழாவாக இது நடந்தது. மூன்றாம் நாளான நேற்று, கொங்கு வர்த்தக கூட்டமைப்பு சார்பில் மூன்றாமாண்டு பொங்கல் விழா நடந்தது. விறகு அடுப்பு மூட்டி, பானையில் பொங்கலிட்டு பெண்கள் வழிபாடு நடத்தினர். பின், பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடந்தன. ஆண்கள், பெண்கள், சிறுவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பூப்பறிக்கும் நிகழ்ச்சியில் மகிழ்ச்சி பொங்க இளம் வயதினர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சியாக, கோலாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம், கம்பத்தாட்டம், சிலம்பாட்டம், துடும்பாட்டம், அண்ணமார் கருப்பராயன் ஆட்டம் ஆகியன நடந்தன. பொங்கல் விழாவுக்கு ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி தலைமை வகித்தார். அமைச்சர் சாமிநாதன், ஜெயசித்ரா சண்முகம், துணை மேயர் பாலசுப்ரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ. தனியரசு, மாநகராட்சி மண்டல தலைவர் பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 'கிட்கோ' இயக்குனர் பாலசுப்ரமணியம், விழா குழு தலைவர் வசந்தகுமார் ஆகியோர் தலைமையில், இயக்குனர்கள், கே.வி.கே., உறுப்பினர்கள் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை