உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லடத்தில் தியான பயிற்சி ஹார்ட்புல்னெஸ் அழைப்பு

பல்லடத்தில் தியான பயிற்சி ஹார்ட்புல்னெஸ் அழைப்பு

பல்லடம்: பல்லடத்தில், நாளை துவங்கவுள்ள யோகா மற்றும் தியான பயிற்சியில் பங்கேற்க, ஹார்ட்புல்னெஸ் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.இந்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஹார்ட்புல்னெஸ் நிறுவனம் மற்றும் பல்லடம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், 'யோக மஹோத்சவம்' எனப்படும் மூன்று நாள் யோகா மற்றும் தியான பயிற்சிகள், நாளை (28ம் தேதி) துவங்கி, 3 நாள் நடக்கிறது.நாளை துவங்க உள்ள பயிற்சி முகாமை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைக்க உள்ளார். நாளை மறுநாள் (29ம் தேதி) கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையிலும், 30ம் தேதி பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன் தலைமையிலும் நிகழ்ச்சிகள் துவங்க உள்ளன. மேலும், ஹார்ட்புல்னெஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் குப்தா, சந்திரன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.உடல் ஆரோக்கியம் மேம்படவும், அமைதியான வாழ்க்கை வாழவும், மூன்று நாள் நடக்க உள்ள இலவச பயிற்சி முகாமில், 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்று பயன்பெறுமாறு ஹார்ட்புல்னெஸ் நிறுவனம் மற்றும் பல்லடம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி