உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  திருப்பூர் அய்யப்பன் கோவிலில்  அரவணை பாயாசம் தயாரிப்பு

 திருப்பூர் அய்யப்பன் கோவிலில்  அரவணை பாயாசம் தயாரிப்பு

திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோடு, அய்யப்பன் கோவிலில் அரவணை பாயாசம் தயாரித்து விற்கப்படுகிறது. கூட்டம் அதிகமாக இருக்கும் போது, அரவணை பாயாசம் தட்டுப்பாடு ஏற்படுகிறது; அதிகம் வாங்கினாலும், சுமந்து எடுத்து வர முடிவதில்லை. திருப்பூரிலேயே அரவணை பாயாசம் கிடைத்தால் பரவாயில்லை என்று, பக்தர்கள் அய்யப்பன் கோவிலில் தெரிவித்துள்ளனர். வேண்டுகோளை ஏற்று, அரவணை பாயாசம் தயாரித்து, பக்தர்களுக்கு விற்கப்படுகிறது. கோவில் நிர்வாகிகள் கூறியதாவது: சபரிமலையில் வழங்கப்படுவது போல், அய்யப்ப பக்த ஜனம் சார்பில், பாரம்பரிய முறைப்படி அரவணை பாயாசம் தயாரித்து, அய்யப்ப சுவாமிக்கு நைவேத்யம் செய்யப்படுகிறது; தொடர்ந்து, பக்தர்களுக்கு, 250 கிராம் அளவுக்கு பாட்டில்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பச்சரிசி, வெல்லம், சுக்கு, மிளகு, சீரகம், கொப்பரை தேங்காய், ஏலக்காய், முந்திரி ஆகிய பொருட்களை கொண்டு தயாரிக்கிறோம். கடந்த சில நாட்களாக, அய்யப்ப பக்தர்கள் அதிக ஆர்வமாக, அய்யப்ப சுவாமிக்கு நைவேத்யம் செய்யப்பட்ட அரவணை பாயாசம் வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை